மட்டக்களப்பு , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் , போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட முச்சக்கர வண்டிகள் சாரதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக முறுகல் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தைக்கு அருகில் தமது முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதியளிப்பதில்லை எனவும், இதனால் தமது வாழ்வாதாரம் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதாக போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இதனிடையில் புதன்கிழமை ( 28 ) காலை களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளருக்கும் , போரதீவுபற்று முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தினருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க செயலாளர் , தம்மை ஒரு போதும் முச்சக்கர வண்டிகளை நிறுத்த அனுமதி தர முடியாது என கூறியதாக போரதீவுபற்று பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவிக்கின்றனர்

