போராட்டத்தை ஒடுக்கிய வழக்கில் 3 வங்கதேச அதிகாரிகளுக்கு மரண தண்டனை

9 0

 வங்​கதேசத்​தில் கடந்த 2024 ஜூலை​யில் இடஒதுக்​கீட்​டில் திருத்​தம் கோரி மாணவர்​கள் தொடங்​கிய போராட்​டம் மிகப்​பெரிய கிளர்ச்​சி​யாக மாறியது.

அப்​போது பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீ​னா​வின் அரசு கடும் ஒடுக்​கு​முறை​யில் ஈடு​பட்​டது. இதில் பலர் கொல்​லப்​பட்​டனர். அப்​போது நிகழ்ந்த மனித குலத்​துக்கு எதி​ரான குற்​றங்​கள் குறித்து டாக்​கா​வில் உள்ள சர்​வ​தேச குற்​ற​வியல் தீர்ப்​பா​யம் விசா​ரித்து வரு​கிறது. இதில் இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​துள்ள முன்​னாள் பிரதமர் ஷேக் ஹசீ​னா, முன்​னாள் உள்​துறை அமைச்​சர் அசாது​சா​மான் கான் கமால் ஆகியோ​ருக்கு கடந்த நவம்​பரில் மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் மாணவர்​கள் கிளர்ச்​சி​யின்​போது டாக்​கா​வின் சங்கர்​புல் பகு​தி​யில் 6 பேர் கொல்​லப்​பட்ட ஒரு வழக்​கில் முன்​னாள் டாக்கா பெருநகர காவல் ஆணை​யர் ஹபிபுர் ரஹ்​மான், முன்​னாள் இணை ஆணை​யர் சுதீப் குமார் சக்​ர​வர்த்​தி, முன்​னாள் கூடு​தல் துணை ஆணை​யர் ஷா ஆலம் முகமது அக்​தருல் இஸ்​லாம் ஆகியோ​ருக்கு நேற்று மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

மூவரும் தலைமறை​வாக உள்ள நிலை​யில் இத்​தீர்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தலைமறை​வாக உள்ள ஒரு​வர் உட்பட 5 முன்​னாள் காவல் அதி​காரி​களுக்கு வெவ்​வேறு கால அளவில் சிறைத் தண்​டனை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஹசீ​னா​வின் ஆட்சி அகற்​றப்​பட்ட பிறகு வங்​கதேச பொதுத் தேர்​​தல் வரும் பிப்​ர​வரி 12ல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில்​ இத்​தீர்ப்​பு வழங்​கப்​பட்​டுள்​ளது.