முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசனிடமிருந்து வாக்குமூலம் பதிவு!

10 0

முன்னாள் அமைச்சர் பீ.ஹரிசன் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (27) காலை முன்னிலையாகியிருந்த நிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பீ.ஹரிசன் அப்பிரிவில் இன்று காலை 8.45 மணியளவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.