பாணந்துறை – பிங்வத்த, திபெத்த பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (26) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, 126 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன்,
சந்தேக நபரைக் கைது செய்து பிங்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பிங்வத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

