சுதந்திர தினத்தை “கரி நாள்” எனப் பிரகடனம் செய்து வடக்கு–கிழக்கில் போராட்டம்

9 0

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ம் திகதியை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதற்கு பொதுமக்களை அணி திரட்டி வலுச்சேர்க்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு இன்று சென்ற மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் அங்குள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்கள், பொது அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.