சுவிட்சர்லாந்தில், மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 பேர் பலியான விடயத்தில், அந்த மதுபான விடுதியின் உரிமையாளர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள விடயத்துக்கு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் Crans-Montana என்னுமிடத்தில் அமைந்துள்ள மதுபான விடுதி ஒன்றில் புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்த தீவிபத்தில் 40 பேர் பலியானார்கள், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, அந்த மதுபான விடுதியின் உரிமையாளரான Jacques Moretti என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மதுபான விடுதி உரிமையாளரான Jacques Moretti தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jacques ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள விடயம் இத்தாலி நாட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலி பிரதமரான ஜியார்ஜியா மெலோனி, Jacques விடுவிக்கப்பட்ட விடயம், புத்தாண்டு தினத்தன்று தீவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அவமதிப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்று கூறியுள்ளார்.
மேலும், மெலோனியும், இத்தாலி வெளியுறவு அமைச்சரும், சுவிட்சர்லாந்துக்கான இத்தாலி தூதரை அழைத்து, Jacques விடுவிக்கப்பட்ட விடயம் இத்தாலியை கோபப்படுத்தியுள்ள விடயத்தை சுவிஸ் அதிகாரிகளிடம் தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.
அத்துடன், சுவிட்சர்லாந்துக்கான இத்தாலி தூதரை ரோமுக்கு திரும்புமாறும் இத்தாலி அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் ஆறு பேரும், காயமடைந்தவர்களில் 10 பேரும் இத்தாலி நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

