காலி , உரகஸ்மன்ஹந்திய, கைலத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தீக்காயங்களுடன் குடும்பஸ்தரின் சடலம் இன்று திங்கட்கிழமை (26) மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் உரகஸ்மன்ஹந்திய, கைலத்த பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.
சடலம் மீட்கப்பட்ட இடத்தில் மரக்கிளைகளும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

