அரசியல்வாதிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிகளை கட்சி நிதியில் வைப்பதை நிறுத்த தனிநபர் பிரேரணை

5 0

அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குரிய சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களை தமது கட்சியின் நிதியத்தில் வைப்பிலிடுவதை நிறுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

அரசியல் கட்சிகள் தமது கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் மாதாந்த சம்பளம்,கொடுப்பனவுகள்,மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் முதலியவற்றை  அத்தகைய அரசியல் கட்சிகளுக்கே மீள வழங்குவதாவது மக்கள் பிரதிநிதிகள் தங்களது சுயாதீனதன்மையை இழக்கின்றதொரு செயற்பாடாகும்.

மக்கள் பிரதிநிதிகளின் மாத சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள்  கட்சியின் நிதியத்துக்கு செல்வது ஜனநாயகத்துக்கு கடும் சவாலாக கருதப்படுகிறது.இவ்வாறு அரசியல் கட்சிகளினால் மக்கள் பிரதிநிதிகளின் மாத சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் முதலியவற்றை தமது நிதியத்தில் வைப்பிலிட கூடாதென பாராளுமன்ற அறிவிக்க வேண்டும் என்று குறித்த தனிநபர் பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளாரர்.