100% வரி மிரட்டல் எதிரொலி- உள்ளூர் பொருட்களை வாங்க பிரதமர் மார்க் கார்னி வேண்டுகோள்

31 0

அமெரிக்க அதிபர் டிரம்ப்-கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் வர்த்தக உறவு வைத்து கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிப்பேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.இந்தநிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு பதிலடியாக வீடியோ ஒன்றை மார்க் கார்னி வெளியிட்டார்.

அதில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து அவர் பேசியதாவது:-வெளிநாட்டு அச்சுறுத்தலை சமாளிக்க கனடா பொருட்களையே வாங்குவோம், கனடாவை கட்டமைப்போம். மற்ற நாடுகளின் செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.எனவே நம்மால் எதை மாற்ற முடியுமோ அதில் மட்டும் கவனம் செலுத்துவோம்.

கனடியர்கள் தங்கள் பணத்தை உள்நாட்டில் செலவழித்து உள்ளூர் தொழிலாளர்களை ஆதரிக்க ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்