“100 தொகுதிகளில் தனித்து போட்டி” – பேராயர் ஆ.சாம் ஏசுதாஸ் அறிவிப்பு

14 0

சிறுபான்மை மக்கள் நலக் கட்சியின் தேசியத் தலைவர் பேராயர் ஆர்.சாம் ஏசுதாஸ், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இஸ்லாமிய கட்சிகளை அரவணைக்கும் அரசியல் கட்சிகள், கிறிஸ்தவ கட்சிகளை புறக்கணிக்கின்றன. நாங்கள் 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறோம். எங்களது கட்சி, இயக்கமாக இருந்த போதே திமுக போன்ற கட்சிகளுடன் பல்வேறு பணிகளை செய்திருக்கி றோம். ஆனால் எங்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 2 சத வீத வாக்குகளை மட்டுமே வைத்திருக்கிற கட்சிகளைக் கூட கூப்பிட்டு சீட்டு வழங்கும் அரசியல் கட்சிகள், 18 சதவீத வாக்குகளை வைத்திருக்கும் எங்களை கண்டுகொள்ளவில்லை.

ஒரு பேராயரை அழைத்து கூட்டத்தில் பேச வைத்துவிட்டு, அங்கொன்றும், இங்கொன்றுமாக நிகழ்ச்சிகளை நடத்திவிட்டால் கிறிஸ்தவர்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். இனி அது நடக்காது. எங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் கட்சியில் இணைந்து தேர்தலில் களம் காண்போம். அப்படி இல்லையென்றால் அரசியல் கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், தேர்தலில் கிறிஸ்தவர்களின் வாக்குகளை கிறிஸ்தவர்களே பெறும் வகையில் 100 தொகுதிகளில் தனியாக நின்று எங்கள் செல்வாக்கை நிரூபிப்போம் என்றார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில மகளிரணி அணி தலைவி தயாமலர், பேராயர் பால் துரை ராஜ், தேசிய ஒருங்கிணைப்பாளர் பாஸ்டர் பால், மாநில தலைவர் ஜெ.பி.ஞானப் பிரகாசம், பொருளாளர் ஜோசப், துணை பொதுச்செயலர் சகரியா உடனிருந்தனர்.