போர் நிறுத்தம் தொடர்பாக அமீரகத்தில் உக்ரைன் – ரஷ்யா – அமெரிக்கா முத்தரப்பு பேச்சுவார்த்தை

13 0

 நேட்டோ கூட்டமைப்​பில் உக்​ரைன் சேரு​வதை எதிர்த்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்​ர​வரி மாதம் ரஷ்யா போர் தொடுத்​தது. இந்த போர் 4 ஆண்​டு​களாக நீடித்து வரு​கிறது.

இந்​தப் போரை நிறுத்த 20 அம்ச சமா​தான திட்​டம் ஒன்றை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்​மொழிந்​தார். இந்​நிலை​யில் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள அபுதாபி நகரில் ரஷ்யா – உக்​ரைன் – அமெரிக்க நாடு​களின் பிர​தி​நி​தி​கள் இடையேயான முத்​தரப்பு பேச்சுவார்த்தை நேற்று முன்​தினம் தொடங்​கியது.

இந்த பேச்​சு​வார்த்தையின் போது உக்​ரைன் எல்லையில் உள்ள முழு​மை​யாக கைப்​பற்​றப்​ப​டாத கிழக்​குப் பகு​தி​களில் தனது படைகளை உக்​ரைன் திரும்​பப் பெற வேண்​டும் என்று ரஷ்யா தரப்​பில் நிபந்​தனை வைக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இந்த பேச்​சு​வார்த்தை விடிய விடிய நடை​பெற்று நேற்று அதி​காலை நிறைவு பெற்​றது.இன்​றும் பேச்​சு​வார்த்தை தொடர்​கிறது. உக்​ரைன் அதிபர் ஜெலன்​ஸ்​கி​யின் பிர​தி​நி​தி​கள் கூறும்​போது, “ரஷ்யா கைப்​பற்றி உள்ள உக்​ரைனின் கிழக்கு பகு​தி​களை திருப்பித் தர வேண்​டும்’’ என்​று தெரி​வித்​தனர்​.