எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக அமையும். பாராளுமன்றத்தால் புதிதாக நியமிக்க உத்தேசிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகி எல்லை நிர்ணயம் தொடர்பான விபரங்களை எடுத்துரைக்க நாங்கள் தயாராகவுள்ளோம். முறையான பரிசீலனைகள் ஏதும் இல்லாமலே எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டது என எல்லை நிர்ணய குழுவின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நாயகமுமான சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
மாகாணசபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தேர்தல் காலத்தில் நாட்டில் இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய பிரச்சாரங்கள், தேர்தல் சட்டத்துக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு விருப்பு வாக்கு முறைமை பிரதான காரணியாக காணப்படுகிறது.
தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளில் ஒருசிலர் தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுகிறார்கள்.ஒருசிலர் இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள்.வடக்கு,கிழக்
இலங்கையில் தேர்தல் முறைமை சிக்கல்குரியதாகவே காணப்படுகிறது. தேர்தல் முறைமை தொடர்பில் கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற குழுக்கள் மற்றும் தெரிவுக்குழுக்களுக்கு பல யோசனைகளையும், பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளோம். இதற்கமைய நாட்டில் கலப்புத் தேர்தல் முறைமையை சிறந்ததாக அமையும் என்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.
அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாகாணசபைத் தேர்தலை பல்வேறு காரணிகளால் நடத்தாமல் இருப்பது முறையற்றது. எல்லை நிர்ணய விடயத்தை குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் தொடர்ந்து பிற்போடுவது முறையற்றது.
2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை அரசியல்வாதிகள் முழுமையாக பரிசீலனை செய்யாமலே எதிர்த்தார்கள். அப்போதைய சூழலில் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை காணப்பட்டமை இதற்கு ஒரு காரணியாகும்.
மாகாணசபைத் தேர்தலை எந்த தேர்தல் முறைமையில் நடத்துவது என்று ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக அமையும். இந்த குழுவில் முன்னிலையாகி எல்லை நிர்ணயம் தொடர்பான விபரங்களை எடுத்துரைக்க நாங்கள் தயாராகவுள்ளோம்.
முறையான பரிசீலனைகள் ஏதும் இல்லாமலே எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டது.ஆகவே இவ்விடயத்தில் உண்மைகளை வெளிப்படுத்த எமக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

