அம்பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

10 0

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுகெதர பிரதேசத்தில் மைக்ரோ  ரகத் துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டாவையும் மறைத்து வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்மீமன விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று சனிக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

வதுகெதர பிரதேசத்திலுள்ள வீடொன்றைப் பரிசோதனை செய்த போது, அங்கிருந்த அறை ஒன்றினுள்  இந்தத் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே வதுகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கியை வேறொரு தரப்பினருக்கு விற்பனை செய்வதற்குச் சந்தேக நபர் திட்டமிட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், அம்பலாங்கொடை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.