தென் கடற்பகுதியில் போதைப்பொருளுடன் இரண்டு இழுவை படகுகள் கைப்பற்றப்பட்டு, 11 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கடற்படை கப்பல்களைப் பயன்படுத்தி ஒரு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இரண்டு இழுவை படகுகளும் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட ஒரு படகுகில் ஐந்து பேரும், மற்றுமொரு படகில் ஆறு பேரும் இருந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட இழுவை படகுகளில் சுமார் 270 கிலோகிராம் போதைப்பொருள் கடத்திச் செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
இரண்டு மீன்பிடி படகுகளுடன் 11 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

