அனுஷ பெல்பிட்டவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

4 0

முன்னாள் அமைச்சின் செயலாளரும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான அனுஷ பெல்பிட்டவை, எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

46 மில்லியன் ரூபாயை எவ்வாறு சம்பாதித்தார், என்பதை வெளியிடத் தவறியதற்காக அனுஷ பெல்பிட்ட இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.