சீனா செல்கிறார் டிரம்ப்

16 0

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் (Donald Trump) வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதி சி சின்பிங் (‍Xi ⁠Jinping) இவ்வாண்டின் பிற்பாதியில் அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் அவர் சொன்னார்.

சீன ஜனாதிபதியுடன் தமக்கு எப்போதுமே நல்ல உறவு இருந்துள்ளது என்றார் டிரம்ப்.

உலகின் ஆகப் பெரிய பொருளாதாரங்களைக் கொண்ட அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கொவிட் காலத்தில் உறவுகள் கசப்படைந்தன. பிறகு கணிசமாக முன்னேறின.

இப்போது அமெரிக்காவின் சோயாக்களைச் சீனா பெரிய அளவில் வாங்குவதாகத் டிரம்ப் கூறினார்.அது அமெரிக்க விவசாயிகளுக்குப் பயனளிக்கிறது என்றார் அவர்.