பாரம்பரிய முறையை பரைசாற்றும் வகையில் வயல்களில் புதிர் எடுத்தல் நிகழ்வு தம்பலகாமத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் (காணி) தம்பலகாமம் பிரதேச பதில் பிரதேச செயலாளருமான ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வு புதுக்குடியிருப்பு பிரதேச வயல் நிலப் பகுதியில் இடம் பெற்றது.
நெல் அறுவடையின் போது பண்டைய முறைப்படி அறுவடை அங்குரார்ப்பண நிகழ்வு இதன் போது ஆரம்பிக்கப்பட்டன.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட சக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

