போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டறியும் நடமாடும் ஆயவகம்

13 0

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வக  நடவடிக்கையை பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்தில் புதன்கிழமை (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது 59 பஸ் சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 8 சாரதிகள் கஞ்சா பயன்படுத்தியிருந்தமையும், 2 பேர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமையும்

போதைப்பொருள் பயன்படுத்தி பயணிகள் பஸ்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் உதவியாளர்களை அடையாளம் காண்பதற்கான இந்த விசேட நடமாடும் ஆய்வகச் சேவை, புதன்கிழமை 21 ஆம்  கொழும்பு பாஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டது. இந்த ஆய்வகச் சேவையின் மூலம் மிகக் குறுகிய நிமிடங்களிலேயே பரிசோதனை அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு  சாரதிகள் எவரேனும் கடந்த 14 நாட்களுக்குள் நான்கு வகையான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தால் அவற்றை இதன் மூலம் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையானது வீதி விபத்துக்களைக் குறைப்பதில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கமைய போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்படும் சாரதிகள் உடனடியாகக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். அத்துடன் அத்தகைய சாரதிகளின் சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்வது வரையான  கடுமையான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தீர்மானித்துள்ளது.

இந்த நடமாடும் ஆய்வகச் சேவையின் ஆரம்ப நாளான நேற்று போக்குவரத்து தலைமையக அதிகாரிகளினால் குறுகிய மற்றும் நீண்ட தூர சேவைகளில் ஈடுபடும் 59 பஸ் சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  அவர்களில் 8 சாரதிகள் கஞ்சா பயன்படுத்தியிருந்தமையும், இருவர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமையும் இந்த ஆய்வகப் பரிசோதனையின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸ் திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனம் ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள இந்த விசேட நடமாடும் ஆய்வகச் சேவை எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதேவேளை இந்த ஆரம்ப நிகழ்வில் பொலிஸ் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி. பி. ஜே. சேனாதீர, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் யு.சி.பி. பெரேரா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.