நாடளாவிய ரீதியில் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் பணிபகிஷ்கரப்பு- முடங்கிய கதிரியல் பிரிவு

17 0

மளிகவத்தை சிறுநீரக வைத்தியசாலை பிரதி பணிப்பாளரின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு  எதிர்ப்புத் தெரி்வித்தும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குதமாறு வசலியுறுத்தியும் புதன்கிழமை (21) தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அரச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் கதிரியல் தொழிநுட்பவியளார்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராடத்தை முன்னெடுத்திருந்தனர்.

வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட  தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நேற்றைய தினம் சகல வைத்தியசாலைகளிலும்  கதிரியக்கச் சேவைகள் முடங்கியிருந்தன.  தகுதியற்றவர்களைக் கொண்டு கதிரியல் பரிசோதனைகளை முன்னெடுத்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சார்ள்ஸ் நுகவெல, அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகக் அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. தகுதியான அதிகாரிகள் இருக்கும்போது, கதிரியக்கப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குத் தெரியாமல் வெளியாட்களைக் கொண்டு கதிரியல் பரிசோதனைகளை முன்னெடுத்தமை, அரச சொத்துக்களை ஆபத்துக்குள்ளாக்கியமை மற்றும் அம்பியூலன்ஸ் வண்டிகளைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியமை போன்ற 8 பிரதான குற்றச்சாட்டுகள் முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டதைடதை முன்னெடுத்திருந்தனர்.

அதிகாரியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், குறித்த அதிகாரியைப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரியும் நேற்று 24 மணிநேர  அடையாள வேலைநிறுத்ததில் ஈடுபட்டிருந்தனர். எனினும் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சார்ள்ஸ் நுகவெல, வைத்தியசாலை கதிரியக்க உத்தியோகத்தர்கள் மேலதிக நேரக் கடமைகளில் இருந்து விலகியுள்ளதால், நோயாளிகளின் உயிரைப் பாதுகாக்கவே தான் மாற்று நடவடிக்கைகளை எடுத்ததாகக் குறிப்பிட்டார்.

அவசர எக்ஸ்-ரே பரிசோதனைகளுக்காக அழைக்கப்பட்டும் உத்தியோகத்தர்கள் வராதது குறித்து அமைச்சுக்குத் தெரியப்படுத்தியமையே அவர்கள் என் மீது கோபம் கொள்ளக் காரணம். நோயாளிகளின் நலன் கருதி, சர்வதேச தரச்சான்றிதழ் பெற்ற தனியார் வைத்தியசாலை உத்தியோகத்தர்களைக் கொண்டு தன்னார்வ அடிப்படையில் (ஊதியமின்றி) சேவைகளைப் பெற்றுக்கொண்டேன் என அவர் விளக்கமளித்திருந்தார். எவ்வாறொனினும் நேற்றைய தினம் வெளிநோயாளர் பிரிவு மற்றும் மாதாந்த சிக்கைக்காக வருகைத்தந்திருந்த நோயாளர்கள் பலர்  இந்த பணிப்பகிஷ்கரிப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மேலும் ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் அவசர சிகிச்சைகளுக்காக  கதிரியல் பரிசோதனைகளைத் தனியார் நிலையங்களில் அதிக பணம் கொடுத்துப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  இந்த இழுபறியால் தூர இடங்களிலிருந்து வருகைத் தந்திருந்த  நோயாளர்களும்  சிகிச்சையின்றி வீடு திரும்பியிருந்தனர்.   இருப்பினும் சுகாதார அமைச்சும், அமைச்சின் உயர் அதிகாரிகளும்  உரிய விசாரணை  மேற்கொண்டு, தீர்வு காணத் தவறியுள்ளதாகச் தொழிற்சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.