நுகர்வோருக்கு ‘சொக்’ கொடுக்கும் மின்சார சபை

28 0

டிட்வா சூறாவளியால் உள்கட்டமைப்புக்கு ஏற்பட்ட ரூ.20 பில்லியன் சேதத்தை நுகர்வோரின் தலையில் சுமத்துவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சூறாவளி மின் பரிமாற்றம் மற்றும் விநியோக வலையமைப்புகள் இரண்டிற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மின் பரிமாற்றக் கோடுகளில் சுமார் ரூ. 1 பில்லியன் மதிப்புள்ள சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகக் கோடுகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் தோராயமாக ரூ. 19 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

மின் பரிமாற்றக் கோடுகள் பெரிய கோபுரங்களைப் பயன்படுத்தி 132,000 kV போன்ற மிக அதிக மின்னழுத்தங்களில் நீண்ட தூரங்களுக்கு மொத்த மின்சாரத்தை கொண்டு செல்கின்றன, அதே நேரத்தில் விநியோகக் கோடுகள் துணை மின்நிலையங்களிலிருந்து வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு சிறிய கம்பங்கள் வழியாக குறைந்த மின்னழுத்த மின்சாரத்தை வழங்குகின்றன.