பணக் கொள்கை கட்டமைப்பு ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்கிலிருந்து முதன்மை பணவீக்கத்தின் விலகல் குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 26(5) ஆம் பிரிவின் கீழ் நிதி விடயதான அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முதன்மைப் பணவீக்கம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

