’’குஷ்’’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

20 0

சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இலங்கை விமானப் பயணி ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) அதிகாலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உணவு விற்பனையில் ஈடுபட்டு வந்த மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் என தெரியவந்துள்ளது.

அவர் போதைப்பொருள் தொகையை மலேசியாவில் எடுத்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கிருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ-468 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

அவரது பயணப் பையில் 03 பொதிகளாக தயார் செய்யப்பட்ட 01 கிலோகிராம் 024 கிராம் “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகுப்பையும் சந்தேக நபரையும்   நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.