ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு ; ஐவருக்கு ஏற்பட்ட நிலை

19 0

ஜிந்துபிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரையோரப் பொலிஸ் நிலைய (Foreshore Police) அதிகாரிகளால் ஜிந்துப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், ஒருவர் 4 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 3 சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் நேற்று (19) புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன், அவர்களில் ஒரு சந்தேக நபரை 23 ஆம் திகதி வரையும், ஏனைய சந்தேக நபர்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கரையோரப் பொலிஸார் மற்றும் கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பணியகம் ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.