பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலை–பண்பாட்டு கழகம் நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் – பொங்கல் விழா 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விழா மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. மங்கள விளக்கை துயிலுமில்லப் பொறுப்பாளர் திரு சுகந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து பிரித்தானிய தேசியக் கொடியை மணியரசன் கலையரசி அவர்கள் ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியை பிரித்தானியா இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஜென்சிகா நியூட்டன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
20 பானைகளுடன் 20 துறையினர் இணைந்து நடத்திய பொங்கல் நிகழ்வு விழாவுக்கு தனிச்சிறப்பை அளித்தது. சிறுவர் விளையாட்டுகள், சிலம்பு விளையாட்டு மற்றும் உறி உடைத்தல் போட்டிகள் கலந்துகொண்ட அனைவரையும் உற்சாகப்படுத்தின.
மேடை நிகழ்ச்சிகளில் வயலின் இசை, கவிதை வாசிப்பு, சிலம்பு ஆட்டம், இசை நிகழ்ச்சிகள், நடனங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நிகழ்வுகள் இடம்பெற்றன. கவிஞர் திரு கந்தையா ராஜ மனோகரன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். ஆங்கில உரையும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கியது.
தமிழ் பாரம்பரியம், பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இந்த பொங்கல் விழா முன்னேடுக்கப்பட்டது.































