முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினருமாறு நந்தன குணதிலக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) காலமானார்.
ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நந்தன குணதிலக தனது 63ஆவது வயதில் காலமானார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான நந்தன குணதிலக 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் போட்டியிட்டு, 3,44173 வாக்குகளைப் பெற்று 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைமையிலான அரசாங்கத்தில் சுற்றுலா, தபால் மற்றும் தொலைத்தொடர்பு பதில் அமைச்சராக பதவி வகித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் ஆரம்பகால உறுப்பினரான நந்தன குணதிலக 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நந்தன குணதிலக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாணந்துறை நகர சபையில் போட்டியிட்டு நகர மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

