மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் பெரும்போக நெற்செய்கை வேளாண்மை வயல்களுக்குள் நேற்று (17) மாலை நுழைந்த காட்டு யானை பல மணிநேரங்கள் வயல்வெளிக்குள் நின்று, விளைந்த பெருமளவு நெல்மணிகளை உட்கொண்டுள்ளன.
குறித்த யானையை அப்பிரதேசத்திலிருந்து விரட்டியடிப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானை வெடிகள் கொழுத்திப்போட்டு, பல மணிநேர போராட்டத்தின் பின்னர், அந்த யானையை காட்டுப்பகுதிக்கு அதிகாரிகள் விரட்டினர்.
யானையின் அட்டகாசத்தினால் பல ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட நெல் வயல்கள் நாசமாக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இந்நிலையில் காட்டு யானைகளிடமிருந்து மக்களையும் பொருட்களையும் பாதுகாக்குமாறு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

