முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, பிரதமர் ஹரணிக்கு எதிராக பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.
6ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் ஹரணிக்கு எதிராக விமல் வீரவன்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவால், பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக (நேற்று திங்கட்கிழமை (12) மற்றும் இன்று செவ்வாய்க்கிழமை (13) ) இரண்டு நாள் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், 6ஆம் தரத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்ததையடுத்து சத்தியாக்கிரக போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

