நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான TNPF உயர்மட்டக் குழு ஓஸ்லோவில் சந்திப்பு

159 0

இன்றைய நாள் ஓஸ்லோவில், International Diplomatic Council of Tamil Eelam (IDCTE) ஏற்பாடு செய்த சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான TNPF உயர்மட்டக் குழுவுடன் இணைந்து, நோர்வே அரசியல் ராயதந்திரிகளுடன் உரையாடலை IDCTE ஆகிய நாம் முன்னெடுத்திருந்தோம்.

இச்சந்திப்புகளின் போது, அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்புகளையும் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் சந்தித்தோம்.

இவர்களில் சிவப்பு (Rødt) கட்சியைச் சேர்ந்த பியோர்னார் மோக்னெஸ், சோசலிச இடதுசாரி (SV) கட்சியைச் சேர்ந்த மரியான் அப்தி ஹுசேன், தொழிலாளர் (Labour) கட்சியைச் சேர்ந்த காம்சி குணரத்னம் மற்றும் டெல்லெஃப் இங்கே மோர்லாந்த், ஆகியோர், தமிழ் அரசியல் ஆர்வலர்கள், நோர்வே நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவர்.

இச்சந்திப்புகளில், NPP/JVP அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து, குறிப்பாக பொறுப்புணர்வு, மனித உரிமைகள் மற்றும் PTA சட்டத்தை ரத்து செய்து அதற்கு மாற்றாக முன்மொழியப்பட்டுள்ள சிறீலங்காவை தீவிரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA) தொடர்பான வரைவு குறித்து நாம் விளக்கமளித்தோம். மேலும், சமாதான செயல்முறையின் போது நோர்வே வகித்த வரலாற்றுப் பங்கைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்திலும் நோர்வே ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை நாம் வலியுறுத்தினோம்.

ஈழத் தமிழர்களின் உரிமைகளுடன் ஒத்திசையும் வகையில் நோர்வே அரசியல் அறிஞர்களின் நிலைப்பாடு சர்வதேச பொறுப்புக்கூறலுக்கும் நடைமுறைகளுக்கும் ஆதரவு வழங்கவும், மேலும் இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இருதரப்பு ஒத்துழைப்பு மனித உரிமைகளுக்கு உட்பட்டதாக இருக்கவும் உறுதிபடுத்துவதும் எமது சந்திப்பின் நோக்கமாக இருந்தது.

IDCTE தொடர்ந்தும் எமது இனத்தின் நீதிக்கான கலந்துரையாடல்களுக்கு தலைமை தாங்கி அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ளுவோம்.