இலங்கைக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தானின் ஷடாப் கான், பஹீம் அஷ்ரப், வாஸிம் ஜூனியர், சல்மான் மிர்ஸா மற்றும் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஷ்லி நொஃபிகே, களத்தடுப்புப் பயிற்சியாளர், ஏனைய பயிற்சியாளர்கள் இன்று அதிகாலை வந்தடைந்துள்ளனர்.
எஞ்சிய வீரர்கள், பயிற்சியாளர்கள் லாகூரிலிருந்து இன்று மாலை கொழும்பை வந்தடையவுள்ளனர்.

