முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது

15 0

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று (05) ஆஜரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இ கைது செய்யப்பட்டார்.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று FCID யில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதாகவும், அவர் இணங்கத் தவறினால் நீதிமன்றத்திடம் கைது பிடியாணை கோரப்படும் என்றும் எச்சரித்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

லங்கா சதொசாவுக்குச் சொந்தமான லாரியை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் முன்னாள் அமைச்சர் அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இந்த விசாரணையில் அடங்கும். விசாரணையின் ஒரு பகுதியாக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.