அற்புதப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக விபத்து

17 0

மட்டக்களப்பு – கல்முனை  பிரதான  வீதியில் பயணித்த வட்டா ரக வாகனமொன்று களுவாஞ்சிகுடி  அற்புதப்  பிள்ளையார்  ஆலயத்திற்கு  முன்னால்  அமைந்திருந்த  தொலைத் தொடர்பு  கம்பத்தில் மோதி ஆலயத்தின்  மதிலிலும்  மோதி விபத்துக்குள்ளான சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை(04)  இடம்பெற்றுள்ளது.

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி  பயணித்த  வட்டா  ரக  வாகனமே இவ்வாறு  விபத்துக்குள்ளாகியுள்ளது.  சாரதியின்  கட்டுப்பாட்டை  இழந்து இவ் விபத்து சம்பவித்துள்ளதுடன் வாகன ஓட்டுநர்  சிறு காயங்களுக்குள்ளான  நிலையில்  தெய்வாதீனமாக  உயிர் பிழைத்து களுவாஞ்சிகுடி  ஆதார  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான  வாகனத்தின்  முன்பகுதி  பலத்த  சேதத்திற்குள்ளாகியுள்ளது.  ஸ்தலத்திற்கு  விரைந்த  களுவாஞ்சிகுடி  போக்குவரத்து  பொலிஸார்  சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்