இந்தியாவின் ஏவிய ஏவுகணையின் உடைந்த பாகங்கள் மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (04) அன்று கரையொதுங்கி உள்ளன. இதை கடற்படையினர் மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை அதன் இன்னொரு பாகம் திருகோணமலை சம்பூர் மலைமுந்தல் கடற்கரையில் கடந்த மாதம் (28) ம்திகதி கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

