பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹீனட்டியன மஹேஷின் உறவினரான “ஜிங்கா” என்றழைக்கப்படும் ஒருவர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் வகை துப்பாக்கி, ஒரு மகசின் மற்றும் T-56 துப்பாக்கிக்கான 25 ரவைகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஹீனட்டியன மகேஷ் என்ற பேரில் பாதாள உலக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, மினுவங்கொட, அங்கொட, ஹீனட்டியன மற்றும் கட்டுநாயக்க ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கப்பம் வசூலித்து, தனது அதிகாரத்தைப் பரப்பி வந்துள்ளதாக தெரியவருகிறது.
உள்ளூர்வாசிகள் இந்த சந்தேக நபருக்கு பயந்து இருந்ததால் இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எந்த முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் , மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மிகவும் உன்னிப்பாக குறித்த சுற்றிவளைப்பு மேற்கொண்டதாக தெரியவருகிறது.
இது தொடர்பான விசாரணைகளின் போதே T-56 வகை தானியங்கி துப்பாக்கிக்கான 25 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

