நீதிமன்றில் முன்னிலையான டக்ளஸ் தேவானந்தா! பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

19 0

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று(27.12.2025) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனது தனிப்பட்ட துப்பாக்கியைச் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடம் கையளித்த சம்பவம் தொடர்பாக, அவர் நேற்றையதினம் (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.