கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றிய விவகாரமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம்(26.12.2025) இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் குடையை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.தேசியக் கொடி என்பது நாட்டின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
இதனை ஏற்றுகின்ற போது அதற்குரிய கௌரவம் வழங்குவது நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரஜையின் கடமையாகும்.
ஆனால் முன்மாதிரியாக செயற்பட வேண்டிய அமைச்சரே இவ்வாறு தேசியக் கொடியை ஏற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

