நைஜீரியாவில் ஐ.எஸ். அமைப்பினரை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

20 0

வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடமேற்கு நைஜீரியாவில் ஐ.எஸ்  அமைப்பினருக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதலை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக, அப்பாவி கிறிஸ்தவர்களைக் குறிவைத்து கொடூரமாகக் கொன்று வருகின்றனர்.

கிறிஸ்தவர்களை படுகொலை செய்வதை நிறுத்தாவிட்டால், நரகத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று நான் முன்பு இந்த  அமைப்பினரை எச்சரித்தேன்,  இப்போது தாக்குதல்  மேற்கொண்டுள்ளோம்.

அமெரிக்கா மட்டுமே செய்யக்கூடியது போல, போர்த் துறை ஏராளமான சரியான தாக்குதல்களை நடத்தியது. தீவிர இஸ்லாமியவாதம் செழிக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.

கடவுள் நமது இராணுவத்தை ஆசீர்வதிப்பார். இறந்தவர்கள் உட்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வது தொடர்ந்தால் இன்னும் பல கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.