மின்கம்பத்தில் மோதிய கார்; இருவர் காயம்

16 0

காலி-மாத்தறை பிரதான சாலையில் தலவெல்ல பகுதியில் இன்று (26)காலை கார் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் மின் கம்பத்தில் மோதியதால் மின் கம்பம் சேதமடைந்தது. உயர் மின்னழுத்த மின் கம்பிகள் பிரதான சாலையில் விழுந்ததால் கனரக வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.