வெளிநாடொன்றில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இலங்கையர் அதிரடியாக கைது

26 0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் ஷினகாவா ரயில் நிலையம் அருகில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உணவகத்திற்கு வெளியே, இலங்கையர் ஒருவர் கத்தியுடன் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கள்கிழமை காலை காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அந்த நபர் தனது கழுத்தில் கத்தியை வைத்து அழுத்திய நிலையில் நின்றதைக் கண்ட பொலிஸார் உடனடியாக அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.

சுமார் பத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் குறித்த இலங்கையருடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி, கத்தியைக் கீழே போடுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

கை மற்றும் கழுத்தில் காயங்கள்

அதன் பின்னர் அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் அந்த நபரின் கை மற்றும் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

வெளிநாடொன்றில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இலங்கையர் அதிரடியாக கைது | Sri Lankan Man Arrested In Japan

எனினும், அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

பொலிஸாரின் அறிவுறுத்தலை ஏற்று கத்தியைக் கீழே போட்ட இலங்கையரை, சட்டத்தை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் சம்பவ இடத்திலேயே கைது செய்யபட்டுள்ளார்.