புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

