மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள திசவீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து 71 வயதுடைய வயோதிப பெண் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (23) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நோய்வாய்ப்பட்டிருந்த 71 வயதுடைய குறித்த வயோதிப பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடயவியல் பிரிவினர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நஸீர் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

