கிழக்குப் பாதையில் கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் நாளை (24) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முக்கிய ரயில் பாதையில் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் பயணத்தை உறுதி செய்யும் வகையில், செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை உறுதிப்படுத்தியுள்ளது

