யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக, ஞாயிற்றுக்கிழமை 21) அன்று சட்டவிரோத விஹாரையென வலி வடக்கு பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டச்சென்ற வேளை பொலிஸாருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.

இதன்போது வேலன் சுவாமி , வலி கிழக்கு தவிசாளர் உட்பட 5 பேர் வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யப்படும்வரை அகன்று செல்ல மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட மக்கள் பிரதிநிதிகள் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

