தமிழகத்தில் நாளை (டிச. 19) முதல் வரும் 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கேரளா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் வரும் 22-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

