ஈரோட்டில் டிச 18-ம் தேதி நடக்கவிருக்கும் ‘விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ தொடர்பாக 11 வழிகாட்டு நெறிமுறைகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 18-ம் தேதி (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம், மூங்கில்பாளையத்தில் காலை 11.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஈரோடு மாவட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காவல் துறையின் முழுமையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு கட்சியினரும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

