மல்யுத்த வீரர் ஜோன் சீனா தனது 20 ஆண்டு மல்யுத்த பயணத்தை முடித்துக் கொண்டார்

11 0

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி நகரில் நடைபெற்ற WWE ‘Saturday Night’s Main Event’ நிகழ்ச்சி, WWE மல்யுத்த ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட WWE சூப்பர் ஸ்டார் ஜோன் சீனா, தனது 20 ஆண்டுகளைக் கடந்த மல்யுத்த பயணத்தை இந்த போட்டியுடன் முடித்துக் கொண்டார்.

பிரபல WWE ரும் நடிகருமான ஜோன் சீனா, தன்னுடைய இறுதி போட்டியில் தோல்வியடைந்த நிலையில் ஓய்வு பெற்றுள்ளார்.

 

கடந்த ஆண்டே தனது கடைசி போட்டி குறித்த அறிவிப்பை அவர் தெரிவித்திருந்தார். 90கள் காலகட்டத்தில் மறக்க முடியாத நினைவுகளில் WWE நிகழ்ச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த சண்டைப் போட்டியில் பல ‘சூப்பர் ஸ்டார்கள்’ வருகை தந்து, வென்று காட்டி, விடைபெற்றுள்ளனர்.

இதில் ஜோன் சீனாவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அவருடைய தனித்துவமான சண்டைப் பாணி மூலம் உலக அளவில் ரசிகர்களை அவர் கவர்ந்தார். ரிங்குங்கள் சண்டைக்காக அவர் என்ட்ரி கொடுக்கும் அந்த தருணத்தில் ஒலிக்கும் பின்னணி இசை பலரது தொலைபேசிகளில் அழைப்பு ஒலிகளாக ஒலித்தது உண்டு.

 

கடந்த 2002-ம் ஆண்டு WWE-ல் அறிமுகமான ஜோன் சீனா, WWE ஜாம்பவான்களான தி ராக், ட்ரிபிள் ஹெச், ரேண்டி ஆர்ட்டன், தி அண்டர்டேக்கர் உள்ளிட்டொருடன் மோதியுள்ளார்.

17 முறை WWE சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், தனது கடைசி போட்டியில் அவர் தோல்வியுடன் விடைபெற்றுள்ளார். பல ஆண்டுகளாக தோல்வியை மறுத்து வந்த சீனா, கடைசியில் சக்தி விட்டுக் கொடுத்தார்.

கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக, WWE ரிங்கில் ஜோன் சீனா, சரணடைந்த தருணம் இது. அந்த நிமிடம் அரங்கில் சில விநாடிகள் அமைதி நிலவியது.

பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா தனது 20 ஆண்டு மல்யுத்த பயணத்தை முடித்துக் கொண்டார்... | John Cena Retired Wwe Matches Last Match

 

பின்னர் அதிர்ச்சி, சோகம், நன்றி உணர்வு என பல்வேறு உணர்ச்சிகள் ரசிகர்களிடையே வெளிப்பட்டது.

தனது கடைசி போட்டியில் குந்தரரை எதிர்கொண்ட ஜோன் சீனா Tap out முறையில் தோல்வியடைந்தார். போட்டி முடிந்ததும், WWE அறையில் இருந்த பல வீரர்கள் ரிங்கிற்குள் வந்து சீனாவை சூழ்ந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்தினர்.

அரங்கின் பெரிய திரையில் அவரது வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய தருணங்கள் ஒளிபரப்பப்பட்டன.

இறுதியாக, ஜோன் சீனா தனது பாதணிகளை ரிங்கில் வைத்து, கேமராவை நோக்கி வணக்கம் செலுத்தினார்.

 

பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா தனது 20 ஆண்டு மல்யுத்த பயணத்தை முடித்துக் கொண்டார்... | John Cena Retired Wwe Matches Last Match

“இந்த பல ஆண்டுகள் என்னுடன் இருந்ததற்கு நன்றி. உங்களுக்குச் சேவை செய்தது பெருமை,” என அவர் கூறியபோது, ரசிகர்கள் கண்ணீருடன் கைத் தட்டினர். அதனைத் தொடர்ந்து, சீனா மெதுவாக வெளியேறினார்.

அரங்கில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி ஜோன் சீனாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த நடை, WWE வரலாற்றில் ஒரு பொற்காலம் முடிவடைந்ததற்கான சாட்சியாக மாறியது.

ஜோன் சீனாவின் இந்த இறுதிப்போட்டி, ஒரு தலைமுறை WWE ரசிகர்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் எனலாம்.

மல்யுத்தம் தவிர ’தி சூசைட் ஸ்குவாட்’, ‘ஃப்ரீலான்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களிலும், டிசி காமிக்ஸின் பிரபலமான ‘பீஸ்மேக்கர்’ வெப் தொடரில் பிரதான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.