அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள புகழ்பெற்ற போண்டி (Bondi) கடற்கரையில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு இன்று(14) பிற்பகல் 2.17 மணியளவில் நடந்தது. தாக்குதல் நடத்திய 2 பேர் மக்கள் மீது 50 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த உடனேயே பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
மற்றொருவர் சுடப்பட்டு பொலிஸாரின் பிடியில் உள்ள நிலையில் வைத்திய சிகிச்சையில் உள்ளார்.
This is remarkable, mass shooting happened one hour ago. ⚾
Random man hides behind a car, then tackles the man with the gun saving lives in Sydney. #Bondi
This is Aussie of the Year, right here..https://t.co/wXB172aVG5 pic.twitter.com/2ayOclKrQr— 破壊弱者 (@16dNh1) December 14, 2025
இந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மேலும் காயமடைந்த சிலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

போண்டி கடற்கரை பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு மைதானம் அருகே நடந்த யூதர்களின் ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

