தாயகம் நோக்கிய பேரிடர் கால உதவித்திட்டம்- திரு திருமதி கிளஸ்ரின் பிரியந்தினி குடும்ப நன்கொடை

63 0

இயற்கை அனர்த்தத்தில் பாதிப்படைந்த முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள மூங்கிலாறு, உடையார்கட்டு வடக்கு, தேவிபுரம் ” ஆ” பகுதி, வெள்ளைப்பள்ளம், மற்றும் முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 100(நூறு) குடும்பங்களுக்கான இயற்கைப் பேரிடர் நிவாரண உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இவ் நிவாரண உதவியினை தாயக மக்கள் பேரிடர்படுகின்ற போதெல்லாம் ஆறுதலும் பேருதவியும் புரிகின்ற யேர்மன் நாட்டில்உள்ள திரு.சிறி அவர்களினுடைய மகள் பிரியந்தினி அவர்களின் இணையேற்பு நிகழ்வு 06/12/2025 இடம்பெற்றதன் பொருட்டு திரு திருமதி கிளஸ்ரின் பிரியந்தினி தம்பதிகளின் நிதிப்பங்களிப்பில் 07.12.2025 அன்று வழங்கப்பட்டது. இவ் உலருணவுப் பொதியில் அரிசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பிஸ்கற் மற்றும் சிறுவர்களுக்கான பால்மா என்பன அடங்குகின்றன. இப் பேருதவியை வழங்கிய கிளஸ்ரின் பிரியந்தினி இணையருக்கு முல்லைத்தீவு மாவட்ட மக்களின் சார்பில் மனம்நிறைந்த நன்றியினையும், திருமண வாழ்த்துகளையும் கூறிநிற்பதோடு, நீண்ட ஆயுளோடும் செல்வங்கள் பெற்று,சீரும் சிறப்புடனும் வாழ இறையாசி வேண்டி வாழ்த்துகிறோம்!
வாழ்க வளமுடன்.