மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ஒன்றரை அடி வரை நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக உன்னிச்சை க் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.
பின்னர் காலநிலை சீரடைந்தமையால் உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மூடப்பட்டு வழமை நிலைக்கு திரும்பியிருந்தது.
மீண்டும் குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்தமையினால் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது

