சீன செஞ்சிலுவை சங்கத்திடமிருந்து இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 டொலர் உடனடி நிதியுதவி

25 0

இலங்கையில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக அவசர நிவாரண நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், சீன செஞ்சிலுவை சங்கம் (Red Cross Society of China) இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு 100,000 அமெரிக்க டொலர் மதிப்பிலான உடனடி நிதியுதவியை அறிவித்துள்ளது.

இந்த உதவி, தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு அவசர உணவுப் பொருட்கள், மருத்துவ உதவிகள் மற்றும் தற்காலிக தங்குமிட வசதிகள் வழங்குவதில் பெரும் பங்காற்றும் என இலங்கை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் மோசமான காலநிலை சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சீனாவின் இந்த விரைவான உதவி நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவின் இன்னொரு சான்றாக அமைந்துள்ளது.