அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் 1 மில்லியன் டொலர் நிதியுதவி

27 0

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பகுதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்த நிலைமையை முன்னிட்டு, மனிதாபிமான உதவியின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா அரசு இலங்கைக்கு 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய உதவி, அவசரமாகத் தேவைப்படும் உணவு, குடிநீர், மருந்துகள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் உயிர் காக்கும் பொருட்கள் வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் இந்த உதவி திட்டங்கள் அமுலாக்கப்பட உள்ளன.

சமீபத்திய காலநிலை மாற்றங்கள் காரணமாக அனர்த்தங்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்த உதவி இலங்கையின் மீட்பு நடவடிக்கைகளுக்கு பெரும் துணையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.